காதல் ஓரு படுகுழி விழுந்தவர்களை விழுங்கிவிடும் எழுந்தவர்களை ஏற்றிவிடும் அதுவும் நம் சொந்த முயற்சியினால் மட்டும் இதோ நாம் விழுந்துவிட்டோம் விழுங்கப்படுவோமா? இல்லை ஏற்றிவிடப்படுவோமா? காலத்தின் கைகளில்
உன் நினைவுகளை எழுதி விட முடிவெடுத்துவிட்டேன்..... ஐயோ முடியாமல் ஓய்ந்துவிட்டது...... பேப்பரும் பேனாவும்..... அதனால் இதயத்தில் செதுக்கிவிட்டேன்............. நான் ஓய்ந்து போகமாட்டேன்
இத்தனை மணி நேரம் நின்று அனைத்தும் மறந்து பேசிவிட்டோம்.......... இப்பொது வலிக்கிறது நம் கால்கள் இல்லை.... நம் மனது இந்த பிரிவை தங்கிக்கொள்ள முடியாமல்!!!!!!!!!!!
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே உச்சி மீது வான் இடிந்தபோதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே நான் உன்னை காதலிக்க.... இப்படி பாரதியின் பொன் வரிகளை மாற்றியமைக்கும் மடமை தந்ததடா உன் மீது நான் கொண்ட காதல்
கொட்டி கிடக்கும் வார்த்தைகள் எடுத்து அழகாய் எழுதிவிட்டேன் உனக்காய் ஒரு காதல் கடிதத்தை......... கொடுக்கத்தான் முடியவில்லை.... ஏற்கனவே சேமிப்பில் கிடக்கிறது பல கடிதங்கள்!!!!!!!!!!!!!