Friday, November 27, 2009

உன் பெயரை
கடற்கரை மணலில்

ஆசையாய் கிறுக்கும்

குழந்தையோடு குழந்தையாக

நானும் கிறுக்க ஆசைபடுகிறேன்....

உன் பெயரை

நீ காயப்பட்டாய்


எத்தணை முறை
என் இதயம் எரிந்தது என்று
தெரியாது.......

காயத்தின் வலி தீர
எத்தணை முறை
நீ காயப்பட்டாய் என்று தெரியும்

காதல் சுவை


ஒவ்வொரு காலையும்

உன் காதோடு

காதல் சொல்லி எழ வேண்டும்.

இந்த இனிமையான நிகழ்வு வேண்டும்....

இனிப்பான காதல் சுவை பருக வேண்டும்.....

உன்னோடு என்றும் வாழ வேண்டும்.........

உன் கண்கள்!!!!!!!!!


பூசிக்கொள்ளாமல் சிவக்கும்

என் கன்னங்களுக்கு

காரணம்

உன் பார்வை

மருதாணியாய் ஆனதாலா?

என் வெட்கங்களை

அழகாய் படம் எடுக்கிறது

உன் கண்கள்!!!!!!!!!

என்ன செய்வேன் நான்.....

கையருகே மாலையாக நீமொட்டுக்களாய் நீ இருக்க.........
தினமும் காதல் நூல் கொண்டு
தொடுக்கிறேன் பூ மாலையாக.....
கையருகே மாலையாக நீ........
சூடிக்கொள்ளும் பாக்கியம் இல்லாமல் நான்

நீ சூட்டியது


கனவாகவே
கலைந்து போகுமோ?

கல்யாண மாலையை
நீ சூட்டியது......

என் கவியை அழகாக்க.


தமிழ் அகரதியை
புரட்டிப் பார்த்தேன்......
இன்னும் என் கவியை அழகாக்க.....
தேடி தேடி கண்டுபித்த வார்ததை இது.........
பிரவின்குமார்........

Friday, November 20, 2009

உன்னிடம் சேராத என்று


நாம் காதல் கரைந்த
இடங்கள்.........
என் தனிமையை வேதனையாய்
பார்க்க.......
ஏன் சென்றாயோ?

ஓரு வார்த்தை சொல்லாமல்.........
நான் உன்னை கற்பனையாய்.....
நினைத்து.....
சோகங்களை சொல்லிவிட்டு செல்கிறேன்.
உன்னிடம் சேராத என்று....

Tuesday, October 20, 2009

மீண்டும் வருகிறாய்.....


மீண்டும் வருகிறாய்.....
என்னை மீட்டு கொண்டு போவாயோ?
திரும்பி வருகிறாய்......
என்னை திருடி கொண்டு போவாயோ?
காலம் கடந்து வருகிறாய்....
என்னை கடத்தி கொண்டு போவாயோ?
என்னை தனியே விட்டு சென்ற என் காதலே......

நீ என்ற என் வாழ்க்கை


ஒவ்வொரு வார்த்தை ரணமாக

வாழ்க்கை சுமையாக.....

நேரம் கனங்களாக........

தீரும் என் காலங்கள்

நீ என்ற என் வாழ்க்கை இல்லாமல்.....

உன்னைத் தவிர


எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தால் என்ன?
வானில் தேடும் பார்வைக்கு
நிலவு ஒன்றை தவிர
வேற ஈடாகுமா?
அதே போல் தான் நீயும்........
உன்னை பார்க்காத
என் பார்வைக்கும்
எதுவும் ஈடாகவில்லை......
உன்னைத் தவிர

Monday, October 19, 2009

தவறாகி போனது


வார்த்தைகள் மட்டும்

வலிக்கும் என்று நினைத்தது

தவறாகி போனது.....

உன் மெளணம் தான்

அதிகம் வலித்தது எனக்கு......

இதற்கு உன்னை வெறுக்கிறேன்...

என்றாவது நீ சொல்லி சென்று இருக்கலாம்

Thursday, October 15, 2009

உன்னிடம் நான்???!!!


விலகிதான் இருக்கிறாய்......
நீ.........!!!!!!!!!!!!!
என்னை விட்டு அல்ல........
என் விழிகளை விட்டு......
உனக்கு நான்??????????????

Monday, September 7, 2009

என்னுயிர் காதலனாய்


என்னையே வெறுத்தேன்........
உன்னை காதலித்ததறகாக.....
காதலை வெறுத்தேன்........
உன்னை காதலித்ததறகாக.....
இப்படி பல பேர் முன்னிலையில்
அறிக்கை மட்டும் விட்டுவிட்டேன்......
இன்றும் நீ அதே இடத்தில்.......
என்னுயிர் காதலனாய்

Wednesday, August 12, 2009

முட்டாள் நான்


காதலுக்கு கண் இல்லை

என்பார்கள்

உண்மையில் அறிவு இல்லை

அதனால் தான்

ஏமாற்றும் உன் விழிகளை

தேடி கண்டுபிடித்த முட்டாள் நான்

Friday, July 31, 2009

மீண்டும் உயிர்

உனக்கு தெரியுமா?

நான் வாழ்கிறேனா என்று

உணராத நேரம் கூட

உன் நினைவுகள்

வாழ்ந்து கொண்டு

இருக்கிறது எனக்குள்

அவை தான்

மீண்டும் உயிர்

தருகிறது எனக்கு!!!

Thursday, July 30, 2009

நீ கேட்கமாட்டாயே?


இன்று நான் வடிக்கும்

உதிரம் கூட சொல்லும்

என் காதலை.........

எப்படி உணர்த்துவாய்

உன் காதலை என்று

இனி நீ கேட்கமாட்டாயே?

Wednesday, July 29, 2009

வாழ்வா? சாவா?


வாழ்வா ? சாவா?

என போராடுகிறது

என் மனதிற்குள்

வாழ்வில் தோற்றுபோய்,

சாவிலாவது வெற்றி

பெற துணிந்துவிட்டேன்.

தோல்வியை மட்டும் பெற்றவளுக்கு

சாவிலும் தோல்வி

காதல்பூவின் மயக்கத்தில்


காதல் பூ கொண்டு

காதல் வாழ்த்து சொல்ல

கனவுகண்டேன் காதலா

காதல்பூவின் மயக்கத்தில் முள்களை

கவனியாது விட்டேன்

இதோ காயத்தோடு என் விரல்கள்!!!!!!!!

Sunday, July 26, 2009

உனக்கு?

சத்தமில்லா அழுகைகளும்,

ரத்தமில்லா காயங்களும்,

யுத்தமில்லா போர்களும்,

பசியில்லா உணவுகளும்,

உறக்கமில்லா இரவுகளும்

காதலின் பரிசாக கிடைத்தது......

எனக்கு மட்டும்

உனக்கு?

இதோ தந்துவிட்டது


இன்பங்களை மட்டுமல்ல

இன்னல்களை தருவதும்

இக்காதல் தான்............

இதோ தந்துவிட்டது.........

இந்தவலியை ஏற்றுக்கொள்கிறேன்

நமக்காய்......

Friday, July 24, 2009

மீண்டும் ஒரு தருணத்திற்காய்


முதன்முறையாக

உன்னோடு பார்த்த கலை நிகழ்ச்சியை விட

உன்னோடு இருந்த மகிழ்ச்சியில் உறைந்திருந்தேன்

அப்போது என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்

இன்றும் நமக்காய் உயிர் வாழ்கிறது......

மணல் மட்டுமல்ல ....

என் மனமும் தான்..........

மீண்டும் நாம் அங்கு அமரும் தருணத்திற்காய்.........

நாம் விழுந்துவிட்டோம்

காதல் ஓரு படுகுழி

விழுந்தவர்களை
விழுங்கிவிடும்

எழுந்தவர்களை
ஏற்றிவிடும்

அதுவும்
நம் சொந்த முயற்சியினால் மட்டும்

இதோ
நாம் விழுந்துவிட்டோம்

விழுங்கப்படுவோமா
?

இல்லை
ஏற்றிவிடப்படுவோமா?

காலத்தின்
கைகளில்

நீ கிடைப்பாயோ?


நீ மட்டும் வேண்டும்

என்று சொல்லவில்லை

என் காதல்.

நீயும் வேண்டும் என சொல்லித்திரிகிறது

என் காதல்

என்று நீ கிடைப்பாயோ?

காத்திருப்புடன்

ஆவலுடனும் நான்?

Thursday, July 23, 2009

மாறக்கூடாதா?


எனக்காய் நீ காத்திருக்கும்

அருகே இருக்கும்

மரமாய் நானும்..........

உனக்காய் நான் காத்திருக்கும்

மாடிஜன்னல்

கம்பியாய் நீயும்.............

மாறக்கூடாத என

தவித்துதான் போகிறது........

என் மனது.

நமது ஒவ்வொரு

மாலை நேர சந்திப்பிலும்......

எனக்கெதற்கு?


இதயக்குடை

எனக்கெதற்கு?

உன் அன்பின்

மழையில் நனையவே

விரும்புகிறேன்...............

நீ சுற்றி வராமல்

பூவை மாறி

நான் போவதின்

அர்த்தம் தானேன்ன

வண்ணத்துபூச்சியாய்

நீ சுற்றி வராமல்..

என் வாசங்கள்

உன் சுவாசம் தொடாமல்..

காதலில் விழுவதெல்லாம்

என் உறவுகள்

கூடி சொல்கிறது அன்பே......

காதலில்

விழுவதெல்லாம் என்

அழிவிற்கு என்று...........

அவர்களை எதிர்த்து பேச

வலிமை இல்லதாவள்

நான் எப்படி சொல்வேன்

உன்னில் விழுந்தது

விழுதாக என்று!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, July 22, 2009

உனக்குமாய் நான்


எங்கேயோ என்னை பார்த்துவிட்டு

ஜோ என ஓடி வருகிறாய்....

ஏன் என்று கேட்டால்

உனக்காய் என்கிறாய்.....

உனக்குமாய் சேர்த்து

நான் மூச்சுவாங்கி நின்றேன்

இதற்காக தானோ

உயிரோடு வாழ்கிறேன்?????????

காதல் கோலம்


அதிகாலை பொழுதினில்

கோலம் போட சென்ற போது

நீ நின்று கொண்டிருந்தாய்

என் வரவை எதிர்பார்த்தது போல்

புள்ளி மட்டும் தான் வைத்தேன்....

காதல் கோலம் உன் பார்வையால்

அழகாய் காட்சியளிக்கிறது.....

என் இதய வாசலில்!!!!!!!!!!!

நான்+நீ=காதல்


நீ நானாகி விட்டாய்...

நான் நீயாகி விட்டாய்.....

நாம் காதலாகிவிட்டோம்.

இருவரை ஓருவராக்கி

பார்க்கும் இக்காதலாகி

போவாம் வா............ நாம்

Tuesday, July 21, 2009

புது மொழியா?


நீ என்னை பார்க்கும் போது

நான் மண்னை பார்க்கிறேன்.....

நான் உன்னை பார்க்கும் போது

நீ விண்னை பார்க்கிறாய்.....

இது தான் கண்கள் பேசும் காதல் மொழியா?

காதல் பேசும் புது மொழியா?

பரிசு


நீ என் விரல் பிடித்து

அணிவித்த மோதிரத்தை

பிறந்த நாள் பரிசாக

ஏற்கவில்லை மனது.........

நம் மணநாள் போல சந்தோசத்தில்

திளைக்கிறது பெண் மனம்........

Monday, July 20, 2009

நம்மை விட


நம்மை விட

நம் நிழல்களுக்கு தான்...........

தைரியம் அதிகம் தான்

எப்போதும் சேர்ந்து திரிகிறது..........

யார் முன்னிலையிலும்.............

Sunday, July 19, 2009

நீயும்,நானும்


உன்னை எதிர்பார்த்து நானும்

என்னை எதிர்பார்த்து நீயும்

வருகிறோம்..........

பார்த்த ம்கிழ்ச்சியில்

பேச வார்த்தையின்றி

பிரிகிறோம்..........

Friday, July 17, 2009

நீ இளைப்பாற

எப்போது நீ தூவி
சென்றாயோ உன் காதல் விதையை..........
இப்போது வேர் ஊன்றி
உனக்காய் காத்திருக்கிறது.....
நீ இளைப்பாற......

Thursday, July 16, 2009

மீண்டும் ஏன்?மீண்டும் ஏன் உயர்த்துகிறாய்......

உன் வில் புருவத்தையும்

பார்வை அம்புகளையும்

ஏற்கனவே உன் விழியோடு

போர் தொடுத்து விழுந்துவிட்டேனே!!!!!!!!!!!

மீண்டும் ஏனடா போர் தொடுக்கிறது அவைகள்.....

காதலும் நீயும்


காதலும் நீயும்

என்று என்னில் வந்தாயோ?

அன்றில் இருந்து

உறக்கமும் இல்லை

என் மேல்

இரக்கமும் இல்லை

இந்த இனிய காதலுக்கும் உனக்கும்...........

Tuesday, July 14, 2009

பெண்ணில் நீ


இதோ

நிலவொளியில் நீ

நீலவானில் நீ

பூக்களில் நீ

ஒடும்நதியில் நீ

மேடானமலையில் நீ

பார்க்கும்கண்ணில் நீ

எழுதும் பெண்ணில் நீ

கோபம் கூட காதலாகுமா?ஆயிரம் முறை கோபப்படலாம்

நீ கெஞ்சி கொஞ்சுவதை ரகசியமாய் ரசிக்க

என் செல்ல கோபங்களை வெல்லும்

உன் சின்ன காதல் பார்வையும்

மெல்ல புன்னகையும்

கோபம் கூட காதலாகக்கப்படுவது

நம்மிடத்தில் தானோ என்னவனே??????

நான் எப்படி வெல்வது?எத்தனையோ முறை

உன் உயரத்தோடு......

என்னை ஓப்பிட்டு பார்த்திருக்கிறேன்!!!!

நீ எப்படி கண்டுபிடித்தாயோ...

என் தலையில் குட்டு வைத்து,

சொல்லி செல்கிறாய்.....

நம்மிடத்தில் உயர்வு தாழ்வு வேண்டாமடி என்று........

உன் அன்பை நான் எப்படி வெல்வது?

ஏன் விலகி நிற்கிறாய்


நீ நண்பன் என்றபோது

பக்கம் இருந்தாய்......

இப்போது

நீ காதலாகி ஏன்

விலகி நிற்கிறாய்..

உன் நிழல்களை தந்துவிட்டு

ஏன் விலகி நிற்கிறாய்....

Monday, July 13, 2009

நீ வருவாய் என
என் வீட்டு வாசலிலே

தவம் கிடக்கிறேன்.....

நீ வரும் திசை நோக்கி

பார்த்து இருக்கிறேன்.....

நீ வருவாய் என

Friday, July 10, 2009

இதயத்தில் செதுக்கிவிட்டேன்
உன் நினைவுகளை
எழுதி விட முடிவெடுத்துவிட்டேன்.....
ஐயோ முடியாமல்
ஓய்ந்துவிட்டது......
பேப்பரும் பேனாவும்.....
அதனால் இதயத்தில் செதுக்கிவிட்டேன்.............
நான் ஓய்ந்து போகமாட்டேன்

நம் மனது


இத்தனை மணி நேரம்
நின்று அனைத்தும் மறந்து
பேசிவிட்டோம்..........
இப்பொது வலிக்கிறது
நம் கால்கள் இல்லை....
நம் மனது
இந்த பிரிவை தங்கிக்கொள்ள முடியாமல்!!!!!!!!!!!

Thursday, July 9, 2009

ஓர் இன்பச்சுமை


தினமும் சுமந்து

திரிகிறது மனம்.......

உன் நினைவுகளை

சுகமாக எண்ணி.நீ எனக்கு ஓர் இன்பச்சுமை அல்லவா?

Wednesday, July 8, 2009

உன் கிறுக்கி


கிறுக்கள்கள் கூட

அழகாக தெரிகிறது........

உன் பெயருடன்

என் பெயரையும்

தினமும் கிறுக்கும்போது...........

என்றும் அன்புடன்
உன் கிறுக்கி..............

காதலியின் கட்டளைகள்


கட்டளையிட்டது நானாலும்

கட்டுக்குள் அடங்கி நிற்பது

நீ தானே.............

காதலே என் காதலே...

உன் ஓவ்வொரு

சொல்லிலும் செயலிலும்

என்னை வென்றுகொண்டிருக்கிறாய்....

Tuesday, July 7, 2009

அச்சம் என்பதில்லையே


அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான் இடிந்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே நான் உன்னை காதலிக்க....
இப்படி பாரதியின் பொன் வரிகளை மாற்றியமைக்கும்
மடமை தந்ததடா உன் மீது நான் கொண்ட காதல்

Friday, July 3, 2009

உனக்கான பதில்கள் காதலனேதனிமையில் நான் இருந்த நேரம்

உன்னிடம் பேச வேண்டும் என

நீ அழைத்து சொல்ல வந்தது காதலிக்கிறேன்

என்பாய் என்று நான் நினைத்தது

வந்தது பொய்யாக போனது

நீ என்னை மணப்பதாக அல்லவா சொல்கிறாய்......

பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை....

என் தலை அசைப்பில் புரிந்ததோ

உனக்கான பதில்கள் காதலனே

என் பிரவினே...........